சூடான செய்திகள் 1

நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் சுற்றிவளைப்பு – 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம்

(UTV|COLOMBO)-ஜனவரி முதலாம் திகதி முதல் பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேற்கொண்ட சுற்றிவளைப்புக்களில் 90 லட்சம் ரூபாய்க்கும் அதிகளவான அபராதம் அறவிடப்பட்டுள்ள தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதம் மாத்திரம் 1376 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு 90 லட்சத்து 28 ஆயிரத்து 500 ரூபாய் தண்டப்பணமாக அறவிடப்பட்டுள்ளதுடன், பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி வரை 154 சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு நான்கு லட்சத்து 65 ஆயிரம் ரூபாய் அபராதமாக அறவிடப்பட்டுள்ளதாக நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபை மேலும் குறிப்பிட்டுள்ளது.

Related posts

ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் இலங்கை விஜயம்

464 பேருக்கு கிராம உத்தியோகத்தர் நியமனங்கள்

காட்டு யானைகளின் கணக்கெடுப்பு அடுத்த மாதம்