கிசு கிசு

ஆபாச கோணத்தில் படமெடுப்பது தண்டனைக்குரிய குற்றம்

பெண்களுக்குத் தெரியாமல் அவர்களை ஆபாசமான கோணங்களில் படமெடுப்பது பிரிட்டனில் தண்டனைக்குரிய குற்றமாக்கப்பட்டுள்ளது.

ஆபாசமான கோணங்களில் படமெடுப்பதைக் குற்றமாக்கும் சட்டத்திற்கு எலிசபெத் மகாராணி அதிகாரப்பூர்வ அனுமதி அளித்ததைத் தொடர்ந்து, அந்தச் சட்டம் அமுலுக்கு வருகிறது.

லண்டனைச் சேர்ந்த ஜீனா மார்ட்டின், கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் இசை நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டபோது, அவருக்குத் தெரியாமலேயே ஆபாசமான கோணத்தில் அவர் படமெடுக்கப்பட்டார்.

அதற்கு எதிராக அவர் பொலிஸ் நிலையத்தில் புகார் கொடுத்தும், அது அலட்சியப்படுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, ஆபாசமான கோணத்தில் படமெடுப்பதை தண்டனைக்குரிய குற்றமாக்குவதற்காக அவர் தீவிர பிரசாரம் மேற்கொண்டார்.

இது தொடர்பான அவரது மனுவில் 58,000-க்கும் மேற்பட்டவர்கள் கையெழுத்திட்டனர். இந்த விவகாரத்தில் தொழிலாளர் கட்சியும் ஜீனா மார்ட்டினுக்கு ஆதரவளித்தது.

அதையடுத்து, ஆபாசக் கோணங்களில் படமெடுப்பதைக் குற்றமாக்கும் சட்டமூலம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

இந்த நிலையில், அச்சட்டத்திற்கு தற்போது எலிசபெத் மகாராணியின் அதிகாரப்பூர்வ ஒப்புதலும் கிடைத்துள்ளது.

 

 

 

 

 

Related posts

நயன்தாராவின் 3-வது காதலும் முறிந்து விட்டதா..?

‘நான் மக்களின் நண்பன்’ – ரணில்

வருமான வரி செலுத்துவோரின் பிள்ளைகளுக்கு தேசிய பாடசாலையில் இடம்; வறிய குடும்பத்தின்?