சூடான செய்திகள் 1

துப்பாக்கிச் சூட்டிற்கு இலக்கான பொலிஸ் அதிகாரி வைத்தியசாலையில் அனுமதி

(UTV|COLOMBO)-கடவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் பொலிஸ் அதிகாரி ஒருவர் இன்று (14) மாலை காயமடைந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

கடவத்தை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஆலமரத்திற்கு அருகில் முச்சக்கர வண்டி ஒன்றில் நபர் ஒருவர் ஹெரோயின் வைத்திருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பொலிஸார் சோதனையை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது சந்தேக நபரை ஹெரோயினுடன் கைது செய்து பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு செல்ல முற்பட்ட போது குறித்த நபர் பொலிஸாரிடம் இருந்த தப்பிச் செல்வதற்காக போராடிய சந்தர்ப்பத்தில் பொலிஸ் அதிகாரியின் கையில் இருந்த துப்பாக்கி வெடித்ததில் குறித்த பொலிஸ் அதிகாரி காயமடைந்துள்ளார்.

காயங்களுக்கு உள்ளான பொலிஸ் அதிகாரி ராகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் 22 வயதுடைய இளைஞன் ஒருவன் 10g ஹெரோயினுடன் கைது செய்யப்பட்டுள்ளான்.

சம்பவம் தொடர்பில் கடவத்தை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

Related posts

களுகங்கை திட்டத்தின் பூர்த்தி , லக்கல புதிய பசுமை நகர அங்குரார்ப்பண வைபவம் இன்று(08)

பிரியங்காவை காங்கிரஸ் தலைவராக தெரிவு செய்ய வேண்டும் – பீட்டர் அல்போன்ஸ்

மரங்கள் வெட்டும் இயந்திர கருவிகள் பதிவு – 20 ஆம் திகதி ஆரம்பம்