கேளிக்கை

திருமண அறிவிப்பை வெளியிட்டார் ஆர்யா…

(UTV|INDIA) தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான எங்க வீட்டு மாப்பிள்ளை நிகழ்ச்சியில் அவருக்கு மணப்பெண் தேடல் நடந்தது. இதில் 16 பெண்கள் பங்கேற்றனர். அவர்களில் ஒருவரை மணப்பெண்ணாக ஆர்யா தேர்வு செய்வார் என்று எதிர்பார்த்த நிலையில், அது நடக்கவில்லை. அதன்பிறகு தொடர்ந்து படங்களில் நடித்தார். பெற்றோரும் தீவிரமாக மணப்பெண் தேடி வந்தனர்.
https://twitter.com/arya_offl/status/1095923409035227136
இந்த நிலையில் ஆர்யாவுக்கும், நடிகை சாயி‌ஷாவுக்கும் காதல் மலர்ந்துள்ளதாக கிசுகிசுக்கள் பரவியது. சாயி‌ஷா தமிழில் வனமகன், கடைக்குட்டி சிங்கம், ஜூங்கா, கஜினிகாந்த் ஆகிய படங்களில் நடித்துள்ளார். கஜினிகாந்த் படத்தில் ஆர்யா ஜோடியாக நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்ததாக கூறப்பட்டது. இதனை இருவரும் மறுக்கவில்லை.
இந்த நிலையில், காதலர் தினமான இன்று சாயிஷாவுடனான தனது காதலை வெளிப்படுத்திய ஆர்யா, தனது திருமண அறிவிப்பையும் வெளியிட்டார். அதில் இருவீட்டாரது ஆசீர்வாதத்துடன் மார்ச்சில் சாயிஷாவை கரம்பிடிப்பதாக ஆர்யா தெரிவித்துள்ளார்.
https://twitter.com/sayyeshaa/status/1095922687019368449
சாயிஷாவும் ஆர்யாவுக்கு காதலர் தின வாழ்த்துக்களை பகிர்ந்துள்ளார்.
ஆர்யாவுக்கும், சாயி‌ஷாவுக்கும் வருகிற மார்ச் மாதம் 10-ந் திகதி திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஐதராபாத்தில் இவர்களது திருமணம் நடக்க இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்துக்கான ஏற்பாடுகளில் இருவீட்டாரும் ஈடுபட்டு உள்ளனர்.

Related posts

நடிகை தீபிகா படுகோன்-ரன்வீர் சிங் திருமண திகதி அறிவிப்பு

இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிக்க வரும் அனுஷ்கா

மலையாள படத்தில் இணையும் ஜாக்கிசான்