வகைப்படுத்தப்படாத

போதைப் பொருள் கடத்தல் குழுவின் தலைவர் அமெரிக்காவில் குற்றவாளியொன அடையாளம்

(UTV|AMERICA) மெக்சிகோவின் போதைப் பொருள் கடத்தல் குழுவின் தலைவரான எல் சாபோ, கஸ்மன், அமெரிக்காவின் நியுயோர்க் பிராந்திய நீதிமன்றில் குற்றவாளியாக அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் மீது 10 குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

அவற்றில் கொக்கெயின் மற்றும் ஹெரோயின் கடத்தல், சட்டவிரோத ஆயுதங்களை பேணியமை மற்றும் பணச்சலவை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளன.

இந்த குற்றங்களுக்காக அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

இன்னும் தண்டனை அறிவிக்கப்படவில்லை.

மெக்சிகோவில் கைது செய்யப்பட்ட அவர் கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவிற்கு மாற்றப்பட்டிருந்தார்.

 

 

 

 

Related posts

குழந்தை பெற்ற அடுத்த அரை மணிநேரத்தில் தாய் செய்த காரியம்…

இந்திய பஸ் விபத்தில் 48 பேர் பலி

ஐ.எஸ். பயங்கரவாத இயக்க தலைவரின் மகன் போரில் பலி