சூடான செய்திகள் 1

ஆசிரியர்களுக்கான தகைமைகள் தொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடல்

(UTV|COLOMBO) சில பாடங்களுக்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும் போது உரிய தகைமையுடையவர்கள் விண்ணப்பிப்பதில்லை என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

விசேடமாக உயர்தரத்தில் விஞ்ஞானப்பிரிவில் கற்பிப்பதற்கான ஆசிரியர்களை இணைத்துக்கொள்ளும்போது இந்த நிலை கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாக, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், உயர்தரத்தில் விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பப் பிரிவுகளில் 15,000 ஆசிரியர்களுக்கான வெற்றிடம் காணப்படுவதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த இந்த வெற்றிடங்களை நிரப்பும் பல்வேறு சந்தரப்பங்களில், தகைமையற்ற பலர் விண்ணப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

ஆசிரியர் தொழிலுக்கான சம்பளம் மிகவும் குறைந்தமட்டத்தில் காணப்படுவதால் தகைமையுடைய பலர் விண்ணப்பிப்பதில்லை என கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பில் கல்வி அமைச்சருடன் கலந்துரையாடி தீர்வொன்றை வழங்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.எம். ரத்னாயக்க கூறியுள்ளார்.

 

 

 

 

Related posts

வெள்ளத்தால் முல்லைத்தீவு மக்கள் அவதி!

இலங்கையில் 8 வது மரணமும் பதிவு

நிர்பயா குற்றவாளிகளுக்கு தூக்கு தண்டனை நிறைவேற்றம்