கேளிக்கை

கல்யாண தகவலால் பட வாய்ப்பை இழந்த சாயிஷா?

(UTV|INDIA) இரண்டு வருடத்துக்கு முன் ‘வனமகன்’ படம் மூலம் தமிழில் அறிமுகமானவர் சாயிஷா. கடந்த ஆண்டு கார்த்தியுடன் அவர் இணைந்து நடித்த ‘கடைக்குட்டி சிங்கம்’ சூப்பர் ஹிட்டானது. அடுத்தடுத்து ‘ஜூங்கா’, ‘கஜினிகாந்த்’ படங்களில் நடித்தார். தற்போது சூர்யா நடிக்க கே.வி.ஆனந்த் இயக்கும் ‘காப்பான்’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில் சாயிஷாவுக்கும் நடிகர் ஆர்யாவுக்கு திருமணம் நடக்கவிருப்பதாக தகவல் வெளியானது. நடிக்க வந்த வேகத்தில் சாயிஷா திருமண பந்தத்திற்குள் இணைவதை அறிந்து இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தங்களது படங்களில் அவரை நடிக்க வைக்க எண்ணியவர்கள் பின்வாங்கினர். தெலுங்கில் திரு இயக்கும் புதிய படமொன்றில் சாயிஷாவை நடிக்க வைக்க பேசிய நிலையில் ஆரம்பத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தவர் திடீரென்று நடிக்க மறுத்தார். அப்படத்துக்காக பெற்ற அட்வான்ஸ் தொகையையும் தயாரிப்பாளரிடம் திருப்பி அளித்தார். இதையடுத்து சாயிஷா நடிக்கவிருந்த கதாபாத்திரத்தில் தற்போது தமன்னா நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஆர்யா, சாயிஷா திருமண தகவல் வெளிவந்து பல வாரங்கள் கடந்த பிறகும் இதுகுறித்து அவர்கள் இருவரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் மவுனம் காத்து வருகின்றனர். திருமணத்துக்கு பிறகு சாயிஷா நடிக்காமல் விலகுவார் என்பதால் இத்தகைய மவுனம் நீடிப்பதாகவும், தற்போது காப்பான் படத்தில் நடித்து வருவதால் அப்படத்தை முடித்துக்கொடுக்கும்வரை திருமணம் பற்றி பேசாமல் இருக்க சாயிஷா முடிவு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

 

 

 

Related posts

விராட் கோலியாக நடிக்கும் துல்கர்

கடைசி விவசாயி

புஷ்பாவாகவே மாறிய டேவிட் வார்னர்