விளையாட்டு

இங்கிலாந்து அணியானது 448 ஓட்டங்கள் முன்னிலையில்

சுற்றுலா இங்கிலாந்து அணிக்கும், மேற்கிந்திய தீவுகள் அணிக்கும் இடையிலான, 3வதும் இறுதியுமான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 4 ஆம் நாள் ஆட்டம் இன்று(12) இடம்பெறவுள்ளது.

போட்டியின் நேற்றைய 3 ஆம் நாள் ஆட்டம் நிறைவடையும் போது, தமது 2வது இன்னிங்ஸில் துடுப்பாடி வரும் இங்கிலாந்து அணி 4 விக்கட்டுக்களை இழந்து 325 ஓட்டங்களை பெற்றிருந்தது.

முன்னதாக மேற்கிந்திய தீவுகள் அணி தமது முதல் இன்னிங்ஸில் துடுப்பாடி 154 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுக்களையும் இழந்தது.

இங்கிலாந்து அணி தமது முதல் இன்னிங்ஸில் சகல விக்கட்டுக்களையும் இழந்து, 277 ஓட்டங்களை பெற்றது.

இந்நிலையில், இங்கிலாந்து அணி 448 ஓட்டங்கள் முன்னிலையில் உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

இலங்கை பெண்கள் கிரிக்கட் அணிக்கு புதிய தெரிவுக்குழு

நாணய சுழற்சியில் இந்தியா வெற்றி!

இலங்கை லெஜண்ட்ஸ் அணி முதலில் களத்தடுப்பு