(UTV|COLOMBO) பாராளுமன்றத்தில் உள்ள அனைத்து மின்தூக்கிகளும், அது தொடர்பிலான மின்தூக்கிகள் பொறுப்பளிக்கப்பட்டுள்ள நிறுவனத்தினால் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளது.
அது, அண்மையில் மின்தூக்கியில் பாராளுமன்ற உறுபப்பினர்கள் 12 பேர் சுமார் 10 நிமிடங்கள் பாராளுமன்ற மின்தூக்கியில் சிக்கியிருந்த சம்பவத்தினால் ஆகும்.
குறித்த சம்பவத்திற்கு பின்னர் அது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவித்திருந்தன. அன்று மின்தூக்கி இடையே செயலிழக்க காரணம் அதிகூடிய பளுவினாலா அல்லது தொழில்நுட்ப கோளாறா என கண்டறிய விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
பொதுவாக பாராளுமன்றத்தில் உள்ள மின்தூக்கி ஒன்றல் 13 பேர் ஒரு முறையில் பயணிக்கக் கூடிய வகையில் உள்ளதோடு, அதன் நிறையானது 900Kg எனத் தெரிவிக்கப்படுகின்றது. எனினும் குறித்த சம்பவம் தொடர்பில் முறையான விசாரணை அறிக்கை ஒன்றினை எதிர்வரும் புதன் கிழமை சபாநாயகரிடம் கையளிக்க உள்ளதாகவும், குறித்த தினத்திற்காக சிசிடிவி காணொளியும் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டதாக பாராளுமன்ற வட்டாரத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.