சூடான செய்திகள் 1

காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும்…

(UTV|COLOMBO) நாட்டின் கரையோர பிரதேசங்களில் இன்றும் நாளையும் காற்றின் வேகம் அதிகரித்து வீசக் கூடும் என வளிமண்டலவில் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அத்துடன், நாட்டின் சில பிரதேசங்களில் இன்று மழையுடன் கூடிய வானிலை நிலவும் எனவும் குறிப்பிட்டுள்ளது.

நாடு முழுவதும், குறிப்பாக வடமேல், வடக்கு, வடமத்திய, மத்திய, தென் மற்றும் கிழக்கு மாகாணங்களில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடிய சாத்தியம் காணப்படுகின்றது..

ஏனைய கடற்பரப்புகளில் காற்றானது அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60 கிலோ மீற்றர் வரை அதிகரித்த வேகத்தில் வீசக்கூடுவதுடன் அவ்வேளைகளில் கடல் கொந்தளிப்பாகவும் காணப்படும் என தெரிவித்துள்ளது.

இந்நிலையில், கடலில் பயணம் செய்வோரும் மீனவ சமூகமும் இவ்விடயம் தொடர்பாக அவதானமாக இருக்குமாறு வளிமண்டலவில் திணைக்களம் கோரியுள்ளது

 

 

 

Related posts

தெல்தெனிய கொலை சம்பவம் – சந்தேக நபர்களது விளக்கமறியல் நீடிப்பு

பிற்போடப்பட்ட அமர்வு

ஹரீன், மனுசவிற்கான மனுவை விசாரிக்க திகதி அறிவிப்பு!