(UTV|COLOMBO) விவசாயத் திணைக்களம் கூறுவதைப் போன்று படைப்புழுக்களின் தாக்கம் வெற்றிகரமாக ஒழிக்கப்படவில்லை என சுற்றுச்சூழல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தற்போது படைப்புழுக்களின் தாக்கம் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
எனினும் எதிர்வரும் மே மாதம் முதல் நொவம்பர் மாதமாகும் போது படைப்புழுக்களின் தாக்கம் மீண்டும் ஏற்படும் என அவர்கள் எச்சரித்துள்ளனர்.
படைப்புழுக்களின் தாக்கம் தொடர்பிலும் அதற்காக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விவசாய திணைக்களத்தினால் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.
இதன்போது, தற்போது படைப்புழுக்களின் தாக்கம் குறைவடைந்துள்ளதாகவும், எதிர்வரும் மே மாதம் முதல் 2 வாரங்களுக்குள் சோள பயிர்ச்செய்கையை செய்து முடிக்க விவசாயத் திணைக்களம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.