சூடான செய்திகள் 1

நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை உயிரிழப்பு

(UTV|COLOMBO) அரலகங்வில பொலிஸ் பிரிவிற்குட்பட்ட மல்தெனிய பகுதியில் நீரோடை ஒன்றில் விழுந்து குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளது.

நேற்று (10) பகல் 1 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நீரோடையில் விழுந்த குழந்தை அரலகங்வில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உல்பத்வெவ, ருகுனுகம பகுதியை சேர்ந்த 2 வயதும் 3 மாதங்களுமான குழந்தை ஒன்றே இவ்வாறு உயிரிழந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் அரலகங்வில பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 

 

 

 

Related posts

கஞ்சிபான இம்றானின் உதவியாளர் ஜீபும்பா கைது

யாழ் பல்கலைக்கழகத்தின் கிளிநொச்சி தொழில்நுட்ப பீடத்திற்கு பூட்டு

முன்னாள் ஜனாதிபதி தினமும் ரணில் இருக்கும் திசையை நோக்கி வணங்க வேண்டும்