கிசு கிசு

வங்கிகளில் கணக்குளை வைத்திருப்போருக்கான முக்கிய அறிவித்தல்…

(UTV|COLOMBO) வர்த்தக வங்கிகளில் சேமிப்புக் கணக்குகளை பேணுவோர் தங்களது கணக்கு மீதியினை ஆயிரம் ரூபாவிற்கு குறைவாக பேணி வந்தால், மாதாந்தம் 25 ரூபா கட்டணம் அறவீடு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி வங்கியொன்றின் சேமிப்புக் கணக்கில் ஆயிரம் ரூபாவிற்கு குறைந்தளவிலான மீது பேணப்பட்டு வந்தால் மதாந்தம் தலா 25 ரூபா என்ற அடிப்படையில் கட்டணம் அறவீடு செய்யப்பட்டு 40 மாதங்களில் கணக்கு மூடப்பட்டு விடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயிரம் ரூபாவிற்கும் குறைந்தளவில் மீதியை பேணும் வங்கிக் கணக்குகளை நடாத்திச் செல்வதில் நிலவி வரும் நெருக்கடி நிலைமையே, இதற்கான காரணம் என வர்த்தக வங்கிகள் சுட்டிக்காட்டியுள்ளன.இடைநடுவில் பணம் வைப்புச் செய்தால் வழமை போன்று கணக்கு பராமரிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பசில் – ரணில் இடையே இன்று முக்கிய சந்திப்பு

கோபமடைந்த மஹிந்த ராஜபக்ச செய்த காரியம்?

நாட்டில் சிறுபான்மை என்ற ஒரு இனமே இல்லை