சூடான செய்திகள் 1

கோட்டாவின் கோரிக்கையை நிராகரித்த நிரந்தர நீதாய மேல் நீதிமன்றம்

(UTV|COLOMBO) டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணம் தொடர்பிலான வழக்கினை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளாது நிராகரிக்குமாறு கோரிய கோரிக்கையானது விசேட நீதாய மேல் நீதிமன்றம் இன்று(11) நிராகரித்துள்ளது.

மெதமுலனையிலுள்ள, டி.ஏ. ராஜபக்‌ஷ ஞாபகார்த்த அருங்காட்சியக நிர்மாணத்தின் போது ரூபா 33 மில்லியன் அரசாங்க நிதி முறைகேடாக பயன்படுத்தப்பட்டுள்ளதாக சட்டமா அதிபரினால் குறித்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்‌ஷவுக்கு எதிராக, விசேட மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள குறித்த வழக்கை, கடந்த ஜனவரி 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகின்றமையும் சுட்டிக்காட்டத்தக்கது.

 

 

 

Related posts

மஹிந்தானந்த அளுத்கமகேவுக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

பாராளுமன்ற தெரிவுக்குழு முன்பாக சாட்சியம் வழங்க ஜனாதிபதி மைத்திரி இணக்கம்

தொழிநுட்ப தொல்பொருள் நிலையமும் நூலகமும் ஜனாதிபதியினால் திறப்பு