சூடான செய்திகள் 1

பெரும்பாலான மாகாணங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) அடுத்த சில நாட்களுக்கு (குறிப்பாக 11 ஆம் திகதியிலிருந்து 13 ஆம் திகதி வரை) நாட்டிலும் நாட்டைச் சூழவுள்ள கடற்பரப்புகளிலும் காற்றுடன் கூடிய நிலைமை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேல், சப்ரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களில் பி.ப. 2.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

கிழக்கு கரையோரப் பகுதிகளில் காலை வேளையில் சிறிதளவான மழை பெய்யக் கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப் பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.

 

 

 

 

Related posts

வேலையில்லா பட்டதாரிகளால் லோட்டஸ் வீதி மூடப்பட்டுள்ளது

மின்சார துண்டிப்பு தொடர்பான கால அட்டவணை இதோ…

முசலியும் அமைச்சர் ரிஷாட் பதியுதீனும்!!!!