சூடான செய்திகள் 1

கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம்

(UTV|COLOMBO) கொழும்பு, யாழ்ப்பாணம் ஆகிய மாவட்டங்களில் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த வேலைத்திட்டம் எதிர்வரும் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அமுல்படுத்துவதாக தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த வருடம் 6 ஆயிரம் டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக அந்தப் பிரிவின் விசேட வைத்திய நிபுணர் பிரஸீலா சமரவீர தெரிவித்துள்ளார்.

கடந்த வருடத்தை விட இவ்வருட ஆரம்பப் பகுதியில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதாகவும் விசேட வைத்திய நிபுணர் பிரஷீலா சமரவீர கூறினார்.

 

 

 

Related posts

ஹெரோயினுடன் ஒருவர் கைது

49 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்குத்தாக்கல்-நுகர்வோர் அதிகார சபை

1990 சுவசெரிய’ சேவை மத்திய மாகாணத்திலும் ஆரம்பம்