கிசு கிசு

மின்தூக்கியில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை மட்டு?

(UTV|COLOMBO) பாராளுமன்ற உறுப்பினர்கள் 12 பேர் பயணித்த பாராளுமன்ற மின்தூக்கி இடைநடுவில் செயலிழந்தமையை அடுத்து, அதில் பயணிக்கக்கூடியவர்களின் எண்ணிக்கை 6 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.

குறித்த மின்தூக்கியில் 13 பேருக்கு பயணிக்க முடியும் என்றபோதும், சம்பவம் இடம்பெற்றபோது 12 பாராளுமன்ற  உறுப்பினர்கள் பயணித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள மின்தூக்கி நேற்று திடீரென செயலிழந்ததன் காரணமாக அதில் பயணித்த 12 பாராளுமன்ற உறுப்பினர்களும் சுமார் 15 நிமிடமளவில் மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.

பாராளுமன்ற  கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற  உறுப்பினர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 6 ஆவது மின்தூக்கியே இவ்வாறு செயலிழந்தது.

பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக இரண்டாம் தளத்தை நோக்கி குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் அந்த மின்தூக்கியில் பயணித்த நிலையில், அது இரண்டாம் தளத்தை அடைந்தவுடன் செயலிழந்ததாக சம்பவத்திற்கு முகங்கொடுத்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ஸ. சந்தரசிறி கஜதீர, தயாசிறி ஜயசேகர, டளஸ் அலகப்பெரும, சந்திம வீரக்கொடி, சிசிர ஜயகொடி, பந்துல குணவர்தன, தினேஸ் குணவர்தன, ரஞ்சித் டி சொய்ஸா, சீ.பீ. ரத்நாயக்க மற்றும் அமைச்சர் ரஞ்சித் அளுவிஹார ஆகியோரே இவ்வாறு மின்தூக்கியில் சிக்கிக்கொண்டனர்.

இந்த நிலையில், கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற  படைக்கள சேவிதர் நரேந்திர பெர்னாண்டோ, பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பொறுத்தப்பட்டுள்ள மின்தூக்கிகள் 35 ஆண்டுகள் பழமையானது என்றும், அவற்றை பராமறிப்பதற்காக குறித்த நிறுவனத்தைச் சேர்ந்த இரு பணியாளர்கள் அழைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

அடர்ந்த காட்டில் மாயமான பெண் 17 நாட்களுக்கு பிறகு மீட்பு?

உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றினார் அமைச்சர் ரஞ்சன்

இலங்கையில் முதன்முறையாக ஓரினச்சேர்க்கையாளருக்கு ஆதரவாக இடைக்கால பாதுகாப்பு உத்தரவு