சூடான செய்திகள் 1

கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் செயற்குழுக் கூட்டம் இன்று

(UTV|COLOMBO) வறுமையை ஒழிப்பதற்காக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் வழிகாட்டலில் நடைமுறைப்படுத்தப்படும் கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் கிழக்கு மாகாண செயற்குழுக் கூட்டம் ஜனாதிபதி தலைமையில் இன்று(08) மட்டக்களப்பு மண்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழும் 526,576 மக்களில் 11.3 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அம்பாறை மாவட்டத்தில் 649,402 மக்களில் 2.6 வீதமானவர்களும் திருகோணமலை மாவட்டத்தில் 379,541 மக்களில் 10 வீதமானவர்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த மக்களின் வாழ்வாதார முறைகளை அபிவிருத்தி செய்வதற்காக கிராமசக்தி மக்கள் இயக்கத்தின் மூலம் பல்வேறு திட்டங்கள் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டங்களின் முன்னேற்றம் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து இன்று(08) இடம்பெறவுள்ள செயற்குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளன.

மேலும், மக்கள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டு, அவற்றை தீர்ப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

 

Related posts

இன்று ஜனாதிபதி-ஐ.ம.சு கூட்டமைப்பினருக்கும் இடையில் சந்திப்பு

சில இடங்களில் 100 மி.மீ மழைவீழ்ச்சி…

சீரற்ற காலநிலை – டெங்கு நோய் பரவும் அபாயம் அதிகரிப்பு