சூடான செய்திகள் 1

கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு

(UTV|COLOMBO) சுங்கத் அதிகாரிகள் மேற்கொண்ட தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றுவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தேங்கியுள்ள கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கையைத் விரைவாக முன்னெடுப்பதற்காக அனைத்துத் தரப்பிலிருந்து அதிகபட்ச ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டணமும் அதிகரிக்கப்படமாட்டாது என சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

நாட்டின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை

நேற்று அடையாளம் காணப்பட்ட 22 கொரோனா தொற்றாளர்களின் விபரம்

ஜாகிர் நாயக் தொடர்பில் மலேசிய ஊடகங்களின் நிலை என்ன?