(UTV|COLOMBO) தேசிய அரசாங்கமொன்றை அமைப்பது தொடர்பிலான பிரேரணையை இன்று(07) பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்போவதில்லை என சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
நேற்றிரவு(06) ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித்தலைவர்கள் கூட்டத்தின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த பிரேரணையை அடுத்த வாரத்தில் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சர்கள், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பிலான பிரேரணையை இன்று சபையில் சமர்ப்பித்து விவாதிக்க நேற்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.
இருப்பினும் இதன்போது எதிர்கட்சியினர் குறித்த பிரேரணை எதிர்ப்பு தெரிவித்துள்ளதாக தெரியவருகின்றது.