சூடான செய்திகள் 1

மாகந்துர மதூஷுடன் கைது செய்யப்பட்ட ராஜதந்திர கடவுச்சீட்டை கொண்டிருந்த நபர்

(UTV|COLOMBO) டுபாயில் பாதாள உலகக் குழுவின் தலைவரான மாகந்துரே மதூஷுடன் கைது செய்யப்பட்டவர்களில் இலங்கையின் ராஜதந்திர கடவுச் சீட்டைக் கொண்ட ஒருவரும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகிறது.

கலீஜ் டைம்ஸ் இணையத்தளம் இதனைத் தெரிவித்துள்ளது.

அவர்கள் கைது செய்யப்பட்ட விருந்தகத்தின் விருந்துபசாரம் இடம்பெற்ற வேளையில் குறித்த ராஜதந்திர கடவுச் சீட்டைக் கொண்டவரும் கைதானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை மாகந்துரே மதூஸ் உள்ளிட்டவர்களை நாட்டுக்கு அழைத்துவருவதற்கான நடவடிக்கைகளை, இலங்கையின் பாதுகாப்பு அமைச்சும் வெளிநாட்டு அமைச்சும் மேற்கொண்டு வருகிறது.

இதற்கான பேச்சுவார்த்தைகள் டுபாய் அதிகாரிகளுடன் நடத்தப்படுகின்றன.

 

 

 

 

 

 

 

 

Related posts

கூட்டமைப்பின் தீர்மானம் எதிர்வரும் 24ம் திகதி

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபரின் பிணை நிராகரிப்பு

மாகாணங்களை இணைக்க 3:2 தேவையில்லை என்பது 25வருடங்களாக எம்பியாகவுள்ள ரவூப் ஹக்கீமுக்கு தெரியாதா?