கேளிக்கை

கணவருக்கு ஜெனிலியா எழுதிய உருக்கமான கடிதம்…

(UTV|INDIA) நடிகை ஜெனிலியா தமிழ், தெலுங்கில் சுட்டித்தனம் நிறைந்த கதாபாத்திரங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார். சந்தோஷ் சுப்ரமணியம் படத்தில் வெகுளிப்பெண் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இன்றளவும் அவருக்கு அந்த கதாபாத்திரம் நல்ல பெயரை பெற்றுத் தருகிறது. இந்தி நடிகரும், நீண்ட நாள் காதலருமான ரித்தேஷ் முக்கை கடந்த 2012ம் ஆண்டு மணந்தார் ஜெனிலியா. தங்களது 7வது ஆண்டு திருமண விழாவை ஜெனிலியா, ரித்தேஷ் கொண்டாடி னார்கள். இதையொட்டி ரித்தேஷுக்கு ஜெனிலியா உருக்கமான கடிதம் எழுதி உள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: ஒவ்வொரு பெண்ணும் தனக்கு வரப்போகும் கணவர் எப்படி இருக்க வேண்டும் என்ற எதிர் பார்ப்பு வைத்திருப்பார்கள். ஆனால் எனக்கு அப்படியொரு எண்ணம் இருந்ததில்லை. அதற்கு காரணம் எனது கணவர் ரித்தேஷ், திருமணத்துக்கு முன்பே எனது ஆகச்சிறந்த நண்பராக இருந்தார். நான் தோள் மீது சாய்ந்து அழ வேண்டும் என்று எண்ணும் நேரத்தில் எனக்கு தோள் கொடுப்பவராக ரித்தேஷ் இருக்கிறார். வாழ்க்கை எவ்வளவு கடினமாக இருந்தாலும் அதுபற்றி எண்ணி கவலைப்படவிடாமல் நல்லவிதமாக என்னை பார்த்துக்கொண்டிருக்கிறார். எனவேதான் நான் என்றைக்கும் என் வாழ்வில் எதிர்காலம்பற்றி கவலைப்படாமல் சந்தோஷமாக இருக்கிறேன். இந்த உறவுடன் நாங்கள் வாழ்க்கை முழுவதும் நீடித்திருப்போம். நான் மகிழ்ச்சியுடன் வாழ ரித்தேஷ் அவசியம் தேவை. ஐ லவ் யூ ரித்தேஷ். இன்னும் பல கோடி சந்தர்ப்பங்களில் சந்தோஷமாக சிரித்து மகிழவும், ஒருவர் கண்ணீரை ஒருவர் துடைத்துக் கொள்ளவும், பலவீனமான நேரத்தில் ஒருவரையொருவர் உயர்த்திக்கொள்ளவும் வாழ்க்கை முழுவதும் நாம் ஒன்றாகவே இணைந்திருப்போம். இவ்வாறு ஜெனிலியா குறிப்பிட்டிருக்கிறார்.

 

 

 

 

 

Related posts

10 வினாடிகளுக்கு குறைவாகவே பாலியல் தொல்லை – இது குற்றமில்லையெ நீதிமன்றம் தீர்ப்பு

ரஜினி பிறந்தநாள் – வெளியானது பேட்ட டீசர்

அதுக்கு சரிப்பட்டு வரமாட்டீங்க…