வகைப்படுத்தப்படாத

இமயமலைக்கு ஏற்படப் போகும் பேரழிவு?

(UTV|INDIA) இமயமலை மற்றும் இந்து குஷ் பகுதிகளில் உள்ள பனிமலைகள் பருவநிலை மாற்றம் காரணமாக பாரிய அச்சுறுத்தலுக்கு முகங்கொடுத்துள்ளதாக புதிய ஆய்வறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருங்கிணைந்த மலை அபிவிருத்திக்கான சர்வதேச மையம் இந்த ஆய்வை மேற்கொண்டு அறிக்கை வெளியிட்டுள்ளது.

கார்பன் டை ஒக்ஸைடு உமிழ்வு உடனடியாக நிறுத்தப்படவில்லையாயின் அந்த மலைகளின் மூன்றில் இரண்டு பங்கு பனி மலைகள் உருகி போகக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நூற்றாண்டில் அதிகரிக்கும் வெப்பநிலையை 1.5 செல்ஸியஸ் அளவுக்குள் கட்டுப்படுத்த உலகம் முழுவதும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட்டாலும், மலைத் தொடரின் ஒரு பகுதி இருக்காது எனவும் அந்த ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

அத்துடன், இந்த பனி மலை பிராந்தியம் இன்னும் ஒரு நூற்றாண்டுக்குள் வெறும் பாறைகளை கொண்ட பிராந்தியமாக மாறக்கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.

புவி வெப்பமயமாதல், மக்கள் தொகை அதிகரிப்பு மற்றும் வளி மாசடைதல் போன்றவை அதற்கு பிரதான காரணமாக உள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

பனிமலைகள் காரணமாகவே, குறித்த மலை தொடர்ரை அண்டிய 8 நாடுகளை சேர்ந்த 250 மில்லியன் மக்கள் நீரை பெற்றுக் கொள்கின்றனர்.

இதனால், எதிர்வரும் ஆண்டுகளில் 165 மில்லியன் மக்கள் நேரடியான பாதிப்பை எதிர்நோக்க வேண்டி வரும் எனவும் அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து

ஆஸ்திரேலிய துணைப் பிரதமர் ராஜினாமா

Water cut for several areas on Friday