உள்நாடு

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கும் கொவிட் தடுப்பூசி

(UTV | கொழும்பு) – 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட சிறுவர்களுக்கான முதலாம் கொரோனா தடுப்பூசியினை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் இந்த வாரத்தில் முன்னெடுக்கப்படும் என பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

12 வயதுக்கு மேற்பட்ட சிறுவர்களுக்கு முதலாம் கொரோனா தடுப்பூசியும், 16 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டாம் தடுப்பூசியினை வழங்குவதற்கும் கடந்த வாரம் சுகாதார அமைச்சு தீர்மானித்திருந்தது.

இதற்கமைய, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் அது தொடர்பில் கல்வி அமைச்சு வழங்கப்பட்டுள்ள வழிகாட்டுதல்களுக்கு அமைய, தடுப்பூசி செலுத்தப்படும் திகதி தீர்மானிக்கப்படவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Related posts

ஹரின் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜர்

வெள்ளவத்தை பகுதி முடக்கப்பட்டதா – நடந்தவை ஒரு கண்ணோட்டம் [VIDEO]

பெண் வைத்தியர் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட சம்பவம் – சந்தேகநபரின் சகோதரி கைது

editor