உள்நாடு

12 ஆவது மாடியில் இருந்து விழுந்து சிறுமி பலி

பொரளையில் உள்ள 24 மாடி அடுக்குமாடி குடியிருப்பின் 12 ஆவது மாடியில் இருந்து விழுந்து 16 வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நேற்று (10) இரவு இடம்பெற்ற விபத்தில் படுகாயமடைந்த சிறுமி, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார்.

பொரளை, சர்பன்டைன் வீதியைச் சேர்ந்த 16 வயதுடைய மாணவி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

உயிரிழந்த சிறுமியின் தாயார், மன அழுத்தம் காரணமாக சிறிது காலமாக வைத்திய சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது.

இருப்பினும், சிறுமி குறித்த மாடியில் இருந்து குதித்தாரா அல்லது விழுந்தாரா என்பதை அறிய பொரளை பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

Related posts

தென்கிழக்கு பல்கலைக்கழக மாணவர்களுக்கான புதிய அறிவித்தல்!

குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 674 ஆக அதிகரிப்பு

அம்புலன்ஸ் சாரதிகளுக்கு சுமார் 300 வெற்றிடங்கள்!