உலகம்

12 இலட்சத்தை தாண்டிய கொரோனா பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை

(UTV|கொழும்பு)- சீனாவில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் ஐரோப்பிய நாடுகளை தொடர்ந்து, தற்போது அமெரிக்காவில் கோரத்தாண்டவம் ஆடி வருகிறது.

உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் அமெரிக்காவில் 311,635 பேர் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 8000க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர்.

நியூயார்க்கில் மட்டும் ஒரே நாளில் 630 பேர் பலியாகி உள்ளதை அடுத்து, அந்த மாகாணத்தில் மட்டும் இறந்தவர்களின் எண்ணிக்கை 3,565 ஆக உயர்ந்துள்ளது.

இதேவேளை, இரண்டு வாரங்களில் வைரஸ் தொற்று அதிகமாகப் பரவ வாய்ப்பு உள்ளது என நியூயார்க் ஆளுநர் ஆன்ட்ரு கோமோ தெரிவித்துள்ளார்.

கொரோனாவால் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளின் பட்டியலில் ஸ்பெயின் நாடும் உள்ளது.

சர்வதேச அளவில் இத்தாலிக்கு அடுத்து ஸ்பெயினில்தான் அதிகளவிலான கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளது.

ஸ்பெயின் நாட்டில் மட்டும் 11,947 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகம் முழுவதும் 1,202,433 பேருக்கு கொரோனா பரவியுள்ளதுடன், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 64,729 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவிய 246,638 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

சவுதி அரேபிய மன்னர் மருத்துவமனையில் அனுமதி

குடியரசுத் தலைவர் தொடர்ந்தும் கோமாவில்

அரபு நாடுகளே கண் திறவுங்கள் – பாலஸ்தீன அரசியல்வாதி .