சூடான செய்திகள் 1

யாழ்.போதனா வைத்தியசாலை தாதியர்கள் அடையாள பணிப்புறக்கணிப்பில்

(UTV|JAFFNA) யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை கடமையாற்றும் தாதிய உத்தியோகத்தர்கள், மூன்று கோரிக்கைகளை முன்வைத்து, இன்று(05) காலை 7.00 மணி தொடக்கம் அடையாள பணிப்புறக்கணிப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

விபத்து அவசர சிகிச்சைப் பிரிவில் கடமையாற்றிய தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன என்று யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைப் பணிப்பாளர் மருத்துவர் த.சத்தியமூர்த்தி தெரிவித்தார்.

அவரால் உறுதிப்படுத்தப்பட்ட சம்பவத்துடன் தாதிய உத்தியோகத்தர்கள் இருவர் மட்டுமே சம்பந்தப்பட்ட நிலையில் சில இணையத்தளங்கள் ஒட்டுமொத்த தாதிய உத்தியோகத்தர்களையும் இழிவுபடுத்தி அவர்கள் அனைவருமே இவ்வாறே செயற்படுகின்றனர் என்று செய்தியை திரிபுபடுத்தி வெளியிட்டிருந்தன.

குறித்த செய்தியால் உளரீதியாகப் பாதிக்கப்பட்ட கடமை உணர்வுள்ள தாதியர்கள் தமது தொழிற்சங்கத்தின் ஊடாக வைத்தியசாலைப் பணிப்பாளரிடம் 03 கோரிக்கைகளை முன்வைத்து இன்று(05) அடையாள பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

01.தங்களால் வழங்கப்பட்டதாக வெளியிடப்பட்டதாக வந்துள்ள செய்தி முற்றிலும் தவறானது என வடமாகாணத்திலுள்ள அனைத்து ஊடகங்களிலும் வெளிவரவேண்டும்.

02.குறித்த இணையத்தளத்துக்கு எதிராக (இணையத்தளத்தின் பெயர் முதலாவது கடிதத்தில் உள்ளது) திணைக்களத் தலைவர் என்ற வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

03.தாதியர்கள் சம்பந்தமான பிரச்சினைகள் யாவும் தாதிய பரிசோதகர்கள் ஊடாக கட்டாயம் கலந்துரையாடப்பட வேண்டும்.

ஆகிய மூன்று கோரிக்கைகளை முன்வைத்தே யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அரச தாதி உத்தியோகத்தர் சங்கத்தின் தலைவரால் கையோப்பமிடப்பட்ட கடிதம் வைத்தியசாலைப் பணிப்பாளருக்கு அனுப்பப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

கொரோனா வைரஸ் – உயிரிழந்தோர் எண்ணிக்கை 106 ஆக உயர்வு

நீதிமன்றில் ஒழுக்க விதிகளை கடைபிடிக்காத சந்தேக நபர்களுக்கு கிடைக்கும் தண்டனை!!

மஹிந்த ராஜபக்ஷ சீனா பறந்தார்!