சூடான செய்திகள் 1

திரைப்பட பாணியில் ATM பண மோசடி

(UTV|COLOMBO) அரச மற்றும் தனியார் வங்கிகளின் தானியங்கி இயந்திரங்களின் ஊடாக மேற்கொள்ளப்படும் பண மோசடி குறித்து காவற்துறை குற்றத் தடுப்பு விசாணை திணைக்களம், விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

கடந்த நாட்களில், நாட்டின் சில பகுதிகளில் தானியங்கி இயந்திரங்களின் ஊடாக பணம் மோசடி இடம்பெற்றமை குறித்து முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டன.

அந்த முறைப்பாட்டுக்களுக்கு அமைய ஒருவரை கைது செய்துள்ளதாகவும், குற்ற தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

வெளிநாட்டவர் ஒருவர் உள்ளடங்கிய குழு ஒன்றினால் குறித்த மோசடி திட்டமிட்ட வகையில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக, தகவல்கள் வெளியாகியுள்ளன.

தானியங்கி இயந்திரங்களுக்கு அருகாமையில் உபகரணம் ஒன்று குறித்த குழுவினரால் பொருத்தப்பட்டு, பின்னர் தானியங்கி அட்டை உரிமையாளர்கள், தமது அட்டையை இயந்திரத்தினுள் செலுத்திய பின்னர் அதன் தரவுகள் களவாடப்படுகின்றன.

பின்னர் அந்த தரவுகளை பயன்படுத்தி போலி அட்டைகள் தயாரிக்கப்பட்டு, குறித்த மோசடி இடம்பெற்று வருவதாக தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், தானியங்கி இயந்திர நிலையங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சீ.சீ.டி.வி கமராக்கள் மூலம் சந்தேகத்திற்கிடமான முறையில், சிலரது புகைப்படங்கள் பெறப்பட்டள்ளதாக, குற்றத் தடுப்பு விசாரணை திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதனை கொண்டு விசாரணைகளை நடத்தி வருவதாக அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

 

 

 

Related posts

ஜனாதிபதியினால் 38 சிரேஷ்ட இராணுவப் படை வீரர்களுக்கு பதவி உயர்வு

2023 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவு திட்டம் 43 வாக்குகளால் நிறைவேற்றம்

பஸ் தரிப்பிடங்களிலுள்ள குறைபாடுகள் குறித்து ஆராய்வதற்குத் திட்டம்-போக்குவரத்து அமைச்சு