சூடான செய்திகள் 1

பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில்

(UTV|COLOMBO) இந்த ஆண்டுக்கான பாதீடு தொடர்பான முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலம் இன்று பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்படவுள்ளது.

இந்த சட்டமூலத்துக்கு அமைய இந்த வருடத்திற்கான செலவு 2312 பில்லியன் ரூபாவாக அமைந்துள்ளது.

இதில் பாதுகாப்பு அமைச்சுக்கு அதிக தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

அதன்படி , பாதுகாப்பு அமைச்சுக்கு 39 ஆயிரத்து 306 கோடி ரூபாய்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

இந்த முன்கூட்டிய ஒதுக்கீட்டு சட்டமூலத்திற்கு கடந்த தினம் அமைச்சரவை அனுமதி கிடைக்கப்பெற்ற நிலையில் , பாதீட்டு பரிந்துரை எதிர்வரும் மார்ச் மாதம் 5ம் திகதி முன்வைக்கப்படவுள்ளது.

பாதீட்டின் மூன்றாம் வாசிப்பு விவாதம் மார்ச் மாதம் 13ம் திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில் , இறுதி வாக்கெடுப்பு ஏப்ரல் மாதம் 4ம் திகதி இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

செனிட்டரி நெப்கின்களை பாவிக்க முடியாத இலங்கை பெண்களின் நிலை!

பெரும்போக நெல் கொள்வனவு ஆரம்பம்

சீனாவில் நிலவிய சீரற்ற வானிலையால் தாமதமான இலங்கை விமானம் மீண்டும் ஆரம்பம்