சூடான செய்திகள் 1

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO) இன்றைய தினத்தில் நாட்டின் மழை வீழ்ச்சியில் அதிகரிப்பை எதிர்ப்பார்ப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது.

வடக்கு , கிழக்கு , ஊவா , வடமத்திய மற்றும் மத்திய மாகாணங்கள் போன்று ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் விட்டு விட்டு மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் குறிப்பிட்டுள்ளது.

ஏனைய பிரதேசங்களில் பிற்பகல் 2 மணியின் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்

மத்திய, மேல் , சப்ரகமுவ மற்றும் கிழக்கு மாகாணங்களிலும் காலி , மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமாக கடும் மழை பெய்யக்கூடும் என அந்த நிலையம் இன்று காலை வௌியிட்டுள்ள செய்திக் குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் ஏனைய பிரதேசங்களில் 75 மில்லி மீற்றர் அளவில் கடும் மழை பெய்யக்கூடும் என வானிலை அவதான நிலையம் குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

எவன்காட் வழக்கு – இடைக்கால தடை

பாராளுமன்ற தெரிவுக் குழு இன்று கூடுகிறது

‘மத்திய அரசும், மாகாண சபையும் இணைந்து பணியாற்றினாலேயே கூட்டுறவுத்துறையை வினைத்திறனுடையதாக மாற்றலாம்’