கேளிக்கை

விஜய் சேதுபதியுடன் இணையும் சுருதிஹாசன்

(UTV|INDIA) தேவர் மகன் படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான சுருதி ஹாசன்.

தற்போது எஸ்.பி.ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் படத்தில் கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பேராண்மை, புறம்போக்கு உள்ளிட்ட படங்களை இயக்கியவர் எஸ்.பி.ஜனநாதன். இந்த படத்திற்கு ‘லாபம்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில் ஜெகபதி பாபு வில்லனாக நடிக்க உள்ளார்.

தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்த ‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளதை எதிர்பார்த்து தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர். இதனுடன் சிந்துபாத், மாமனிதன் ஆகிய படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார்.

 

 

 

Related posts

வைரலாகும் ‘லொஸ்லியா’

மும்பையை கலக்கிய ஹாஜி மஸ்தானாக ரஜினி!

விஜய்க்கு ஜோடியாகும் பிரபல பாலிவுட் நடிகை