சூடான செய்திகள் 1வணிகம்

உருளைக்கிழங்கு மற்றும் சோளத்தின் விலை அதிகரிப்பு

(UTV|COLOMBO) நேற்று முன்தின நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் இறக்குமதி செய்யப்படுகின்ற கிழங்கு மற்றும் சோளம் ஆகியவற்றிற்கான வரி அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இறக்குமதி செய்யப்படுகின்ற உருளைக்கிழங்கு ஒரு கிலோவுக்கான வரி 20 ரூபாயில் இருந்து 50 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம் இறக்குமதி செய்யப்படுகின்ற சோளத்தின் வரி 10 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் பரிந்துரைப்படி உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் இந்த விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளது.

 

 

 

Related posts

இலங்கையின் ஹஜ் யாத்திரிகர்களுக்கு ஏற்றிய தடுப்பூசி தகுதியற்றதா?

காற்று நிலைமையில் ஏற்டப்போகும் மாற்றம்

கொழும்பு பாதுகாப்பு கருத்தரங்கு இன்று ஆரம்பம்