சூடான செய்திகள் 1

ஜனாதிபதியின் அதிரடி செய்தி

(UTV|COLOMBO) ஆசிரியர் சேவையில் ஈடுபட்டுள்ளவர்களுள், அந்தச் சேவைக்கு பொறுத்தமற்ற 7 முதல் 8 சதவீதமானோர் உள்ளனர் என கல்வி அமைச்சின் ஆய்வறிக்கையிலிருந்து தெரியவருவதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
2 இலட்சத்து 75 பேரளயில் உள்ள ஆசிரியர்களுள் 7 முதல் 8 சதவீதமானோர் அந்தப் பதவிக்கும் பொறுத்தமானவர்கள் அல்ல.
இந்த நிலையில், மாணவர்களுக்கு கற்பித்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பது குறித்து, ஆசிரியர்கள் எவ்வாறான எண்ணம் கொண்டுள்ளனர் எனத் தமக்குத் தெரியவில்லை என்று ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மாவனெல்லையில் உள்ள மேலதிக வகுப்புக்கள் கட்டிடமொன்றில் தீ விபத்து

அதிபர்களுக்கான வெற்றிடம் இம்மாத இறுதிக்குள் பூர்த்தி

கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான டெங்கு நோயாளர்கள் பதிவு