சூடான செய்திகள் 1

தேசிய தின நிகழ்வுகளிற்கான ஏற்பாடுகள் பூர்த்தி

(UTV|COLOMBO)  71ஆவது தேசிய தினத்தை முன்னிட்டு காலி முகத்திடலில் நடைபெறவுள்ள நிகழ்வுகளுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியடைந்துள்ளன.

இம்முறை தேசிய தின நிகழ்வில், மரியாதை அணி வகுப்பில் 6,700 க்கும் அதிக படைவீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.

இதேவேளை, தேசிய தின நிகழ்வுகளை முன்னிட்டு இன்றும் ஒத்திகை நடவடிக்கைகள் இடம்பெறவுள்ளன.

இதனால், இன்று காலை 6.30 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி மற்றும் கோட்டையிலிருந்து லோட்டஸ் சுற்றுவட்டம் வரையிலான வீதி தற்காலிமாக மூடப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொள்ளுப்பிட்டியிலிருந்து கொழும்பு நோக்கி செல்லும் வாகனங்கள், கொள்ளுப்பிட்டி சந்தியில் வலது பக்கம் திரும்பி பயணிப்பதற்கும் கொழும்பிலிருந்து வௌியேறும் வாகனங்கள் ஓல்கோட் மாவத்தை மற்றும் பஞ்சிக்காவத்தை ஊடாக கொழும்பிலிருந்து வௌியேற முடியும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், நாளை அதிகாலை 5 மணி முதல் கொள்ளுப்பிட்டி சந்தி மற்றும் லோட்டஸ் சுற்றுவட்டம் பகுதிகளுக்கிடையிலான வீதி மூடப்படவுள்ளன.

சுதந்திர தின நிகழ்வுகள் நிறைவடையும் வரை குறித்த வீதி மூடப்படும் என பொலிஸ் ஊடகப்பேச்சாளார் கூறியுள்ளார்.

பொலிஸாரின் அறிவுறுத்தலுக்கு அமைய செயற்படுமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த நேரத்தில் மாற்று வீதிகளை பயன்படுத்துமாறும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

 

 

 

Related posts

எல்பிட்டிய தேர்தலுக்கான திகதி அறிவிப்பு

editor

ஷானி CID இல் சுமார் 6 மணித்தியாலங்கள் வாக்குமூலம் [VIDEO]

(படங்கள்)-“பொதியிடல் துறையில் ஈடுபடுவோருக்கு முதன் முதலாக அரசு வழங்கும் வரப்பிரசாதம்” -லங்கா பெக் கண்காட்சியில் அமைச்சர் ரிஷாட்!