வகைப்படுத்தப்படாத

கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் அபராதம்

ரஷியாவில் ‘கூகுள்’ உள்ளிட்ட தேடுபொறிகளில், சட்டவிரோத தகவல்களை கொண்ட தளங்கள் இடம் பெறக்கூடாது என கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் அரசு புதிய சட்டம் இயற்றியது.

ஆனால் ‘கூகுள்’ தேடுபொறி இந்த சட்டத்தை பின்பற்றவில்லை என குற்றச்சாட்டுகள் எழுந்தன. தடை செய்யப்பட்ட தளங்கள் அந்த தேடுபொறியில் தொடர்ந்து இடம் பெற்று வந்தன.

இதையடுத்து சட்ட விதிகளை மீறிய குற்றத்துக்காக ‘கூகுள்’ நிறுவனத்துக்கு 7 ஆயிரத்து 600 அமெரிக்க டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.54 லட்சத்து 21 ஆயிரத்து 80) அபராதம் விதிக்கப்பட்டது.

இந்த அபராத தொகையை ‘கூகுள்’ நிறுவனம் செலுத்தி விட்டதாக ரஷிய தகவல் தொடர்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

Mandla Maseko: Would-be African astronaut dies in road crash

කාසියේ වාසිය ශ්‍රී ලංකාවට

வடக்கிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதி!