சூடான செய்திகள் 1

கடல்வாழ் முலையூட்டிகளைப் பார்வையிட அரசாங்கத்தின் அனுமதி அவசியம்

(UTV|COLOMBO)-கற்பிட்டி, மிரிஸ்ஸ, திருகோணமலை ஆகிய கடற்பரப்பிலுள்ள முலையூட்டிகளைப் பார்வையிடுவதற்கு, அரசாங்கத்திடம் அனுமதி பெற்றுக்கொள்ளப்பட வேண்டும் எனத் தெரிவித்து அரசாங்கம் சட்டமொன்றை கொண்டு வர நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி, எதிர்வரும் காலங்களில் இலங்கை கடற்பரப்புகளில் காணப்படும் டொல்பின், திமிங்கலம் ஆகியவற்றைப் பார்வையிடுவதற்கு அரசாங்கத்தின் அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்படவுள்ளது.

இந்தத் தொழில் ஒழுங்குப்படுத்தப்படாது முன்னெடுக்கப்படுவதன் காரணமாக, கடல்வாழ் உயிரினங்கள் பெரிதும் பாதிப்பை எதிர்நோக்கியுள்ளது.

குறித்த முலையீட்டி இனங்கள் இலங்கைக் கடற்பரப்பிலிருந்து அழிந்துச் செல்லும் அபாயத்தை எதிர்நோக்கியுள்ளதாகவும், தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்கள் பணிப்புறக்கணிப்பில்

புத்தளம் கடற்கரையில் கரையொதுங்கிய கழிவுப்பொருட்கள் தொடர்பில் பரிசோதனை

பிரித்தானிய மஹாராணியின் பிறந்தநாளையொட்டி கௌரவிக்கப்படவுள்ள இலங்கையர்