கேளிக்கை

திரிஷா வேடம் ஏற்றார் சமந்தா

(UTV|INDIA)-விஜய் சேதுபதி, திரிஷா நடித்த 96 படம் கடந்த ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்றது. பள்ளி பருவத்தில் தொடங்கும் காதல் கல்லூரிவரை தொடர்வதும் அதன்பிறகு நடக்கும் சம்பவங்களையும் மையமாக வைத்து இதன் கதை அமைக்கப்பட்டிருந்தது. இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்ய முடிவு செய்யப்பட்டது. தமிழில் 96 படத்தை இயக்கிய பிரேம்குமாரே தெலுங்கு படத்தை இயக்குகிறார். இதில் சர்வானந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஏற்கனவே, எங்கேயும் எப்போதும் உள்ளிட்ட ஒருசில தமிழ் படங்களில் சர்வானந்த் நடித்திருக்கிறார்.

விஜய் சேதுபதி கதாபாத்திரத்துக்கு சர்வானந்த் தேர்வான நிலையில் திரிஷா கதாபாத்திரத்தில் அவரையே மீண்டும் நடிக்க வைப்பதுபற்றி ஆலோசிக்கப்பட்டது. அதேசமயம் சமந்தா பெயரும் இந்த கதாபாத் திரத்துக்கு அடிபட்டது. திரிஷாவா, சமந்தாவா என்ற ஊசலாட்டத்தில் இருந்ததற்கு தற்போது விடை கிடைத்திருக்கிறது. திரிஷா ரோலில் சமந்தா நடிக்க தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். முன்னதாக 96 படம் வெளியானபோது இப்படத்தை தெலுங்கில் ரீமேக் செய்யக்கூடாது என்று குறிப்பிட்டிருந்தார். அதன் ஒரிஜினாலிட்டியை அப்படியே தரமுடியாது என்ற எண்ணத்தில் அவர் தனது கருத்தை வெளியிட்டிருந்த நிலையில் தற்போது சமந்தாவே அப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தகக்து.

Related posts

தம்பி படத்தில் பிரபுதேவா

விஷால் – அனிஷா நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில்

கமலுடன் இணையும் ஷகீலா?