சூடான செய்திகள் 1

விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் வைரஸ்

(UTV|COLOMBO)-விண்டோஸ் இயங்கு தளம் ஊடாக பரவிவரும் புதிய கணனி வைரஸ் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு எச்சரிக்கையை விடுத்து இதனை தெரிவித்துள்ளது.

விண்டோஸ் 7/ 8.1 மற்றும் 10 ஆகிய  இயங்கு தள அமைப்புகளுக்கு இதன் ஊடாக பாதிப்பு ஏற்படக்கூடும் என அதன் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரவிந்து மீகஸ்முல்ல சுட்டிக்காட்டியுள்ளார்.

இலவசமாக பதிவிறக்கம் செய்யக்கூடிய மென்பொருள் ஊடாக இந்த வைரஸ் பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் ஊடாக கணனியில் சேமித்து வைக்கப்படும் அத்தியவசியமான தரவுகளுக்கு பாதிப்பு ஏற்படும் அவதானம் காணப்படுகின்றது.

எனினும் மேற்குறிப்பிடப்பட்ட விண்டோஸ்  இயங்கு தள அமைப்புக்களை புதுப்பித்திருந்தால் இந்த வைரஸ்ஸால் பாதிப்பு ஏற்படாது என இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

பாடசாலைகளின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பம்

ஊரடங்கு சட்டம் குறித்த அறிவித்தல்

கொழும்பு பாயிஸ் காலமானார்!