சூடான செய்திகள் 1

படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த விசேட வைரஸ்

(UTV|COLOMBO)-சேனா படைப்புழுவின் தாக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக அமெரிக்காவிலிருந்து ஒருவகையான விசேட வைரஸ் நாட்டிற்கு இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இறக்குமதி செய்யப்பட்டுள்ள குறித்த வைர​ஸை விவசாயத் துறைக்கு அறிமுகப்படுத்துவதற்கான ஆய்வுகள் இன்று(30) முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக, தாவரவியல் ஆய்வு மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் பூச்சியியல் பிரிவின் தலைமை அதிகாரி எஸ்.எஸ். வெலிகமகே தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இலங்கையில் கண்டுபிடிக்கப்பட்ட வைரஸின் மூலம் படைப்புழுவை அழிப்பதற்கான ஆராய்ச்சிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

சேனா படைப்புழுவினை அழிக்கக்கூடிய 4 வகையான பூச்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக எஸ்.எஸ். வெலிகமகே மேலும் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

Related posts

எரிபொருட்களின் விலைகளில் இம்மாதம் மாற்றங்கள் ஏற்படாது

பரீட்சைக்கான அனுமதிப்பத்திரம் தபாலில்

நாடுமுழுவதும் 17 ஆயிரத்து 28 டெங்கு நோயாளர்கள் பதிவு