சூடான செய்திகள் 1

“போதையிலிருந்து விடுதலையான நாடு” மாத்தறை மாவட்ட மாநாடு இன்று(30)

(UTV|COLOMBO)-போதையிலிருந்து விடுதலையான நாடு’ என்ற போதைப்பொருள் ஒழிப்பு தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் மாத்தறை மாவட்ட மாநாடு இன்று(30) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தலைமையில் சனத் ஜயசூரிய விளையாட்டரங்கில் இடம்பெறவுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில், போதைப்பொருள் ஒழிப்பிற்காக விரிவான நிகழ்ச்சித்திட்டங்கள் கடந்த ஒக்டோபர் மாதம் முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன.

போதைப்பொருள் ஒழிப்பு செயலணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ள கடற்படை மற்றும் விமானப்படை அதிகாரிகள் மூலம் மாத்தறை மாவட்டத்திலுள்ள 5 வலயங்களை சேர்ந்த சுமார் 51 பாடசாலைகளின் மாணவர்களுக்கு தெளிவூட்டும் நிகழ்ச்சித்திட்டங்களும் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நிகழ்ச்சித்திட்டங்களின் முன்னேற்ற மீளாய்வும் அவற்றில் பங்குபற்றியவர்களை பாராட்டும் நிகழ்வும் இன்று(30) இடம்பெறவுள்ள மாவட்ட மாநாட்டின் போது மேற்கொள்ளப்படவுள்ளதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

 

 

 

 

Related posts

24 வீடுகள் கொண்ட லயன் குடியிருப்பில் தீ விபத்து

கிடைக்கப்பெற்ற சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும்

மாத்தறை மாணவன் உயிரிழப்பு – மூன்றாவது சந்தேகநபருக்கும் விளக்கமறியல்