(UTV|INDIA)-ஸ்ருதி ஹாசன் கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வெளிவந்த சூர்யாவின் எஸ் 3 படத்தில் நடித்தார். அதன்பிறகு படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருக்கிறார். அதற்கான சரியான காரணத்தை அவர் தெரிவிக்காவிட்டாலும் உலக அளவில் பாப் இசை பாடகியாக வேண்டும் என்று எண்ணத்தில் இருப்பதை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். கடந்த ஆண்டு லண்டனில் ‘தி நெட்’ என்ற இடத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் ஸ்ருதி ஹாசன் பங்கேற்று பாடியது வரவேற்பு பெற்றது. இதுவரை 100-க்கும் மேற்பட்ட இசை நிகழ்ச்சிகளில் திறமை வெளிப்படுத்திய ஸ்ருதி, தன் வாழ்நாள் கனவான லண்டனில் இருக்கும் டரவ்படூர் எனும் இடத்திலும் சமீபத்தில் இசைக்கச்சேரி நடத்தி பாடினார்.
உலகின் மிக சிறந்த இசை அமைப்பாளர்களான பாப் டைலான், எல்டான் ஜான், அட்லே, எட்ஸீரன் போன்றோர் இந்த இடத்தில் இசை நிகழ்ச்சிகளை நடத்தி உள்ளனர். புகழ் பெற்ற இந்த அரங்கு 1954-ல் ஒரு காபி ஹவுஸ் ஆக தொடங்கப்பட்டது. நியூயார்க்கில் உள்ள மேடிஷன் அவென்யூவில் கடந்த ஆகஸ்ட் 15-ந் தேதி நடந்த தி இந்தியன்டே பாரடே எனும் உலகின் மிகப்பெரிய சுதந்திர தின கூட்டத்தில் ஸ்ருதி முழங்கிய வந்தே மாதரம் முழக்கம் அனைவரின் பாராட்டை பெற்றது. விரைவில் நடிக்க வருவேன் என்று ஸ்ருதி ஹாசன் கூறிவந்தாலும் தந்தை கமலுடன் நடிக்க உள்ள சபாஷ் நாயுடு முதல்கட்ட படப்பிடிப்போடு நிற்கிறது. இந்தியிலும் 2 படங்களில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். அதன் படப்பிடிப்பு அவ்வப்போது நடந்து வருகிறது. தமிழில் புதிய படம் எதுவும் ஸ்ருதி ஒப்புக்கொள்ளாமல் இருக்கிறார்.