(UTV|COLOMBO)-பிரதமர் ரணில் விக்ரமசிங்க பெப்ரவரி மாதம் 15ஆம் திகதி காங்கேசந்துறை செல்லவுள்ளதாக அமைச்சர் சாகல ரட்னாயக்க தெரிவித்துள்ளார்.
காங்கேசந்துறை துறைமுக அபிவிருத்தி வேலைத்திட்டத்தை துரிதப்படுத்துவதற்காக பிரதமர் ரணில் விக்ரமசிங்க இந்த விஜயத்தை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கேசந்துறை துறைமுகம் 2021 ஆம் ஆண்டளவில் பொருட்களை எடுத்துச் செல்லக்கூடிய கப்பல் சேவையை கொண்ட துறைமுகமாக மாற்றப்படுமென்று அமைச்சர் கூறியுள்ளார். .
இந்தியாவிடம் இருந்து சலுகை அடிப்படையில் கிடைத்த நான்கு கோடி 50 இலட்சம் அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி அபிவிருத்தி திட்டம் நடைமுறைப்படுத்தப்பட இருக்கிறது.
காங்கேசந்துறை துறைமுகம் தற்சமயம் இலங்கை கடற்படையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதுடன், புதிய அபிவிருத்தித் திட்டத்தின் கீழ், புதிய வாயில் ஒன்று அமைக்கப்படவுள்ளதாக . அமைச்சர் சாகல ரட்னாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.