கேளிக்கை

பனிமழையில் ஆட்டம் போட்ட ஸ்ரேயா

(UTV|INDIA)-‘இஷ்டம்’ தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ஸ்ரேயா. ‘எனக்கு 20 உனக்கு 18’ மூலம் தமிழிலும் அறிமுகமானார். தமிழ், தெலுங்கு, இந்திப் படங்களிலும் நடித்துள்ள ஸ்ரேயா சில ஆங்கிலப் படங்களிலும் நடித்துள்ளார்.
தமிழில் இவர் நடிப்பில் வெளியான கடைசிப் படம் ‘அன்பானவன் அடங்காதவன் அசராதவன்’. அரவிந்த்சாமிக்கு ஜோடியாக ஸ்ரேயா நடித்த ‘நரகாசூரன்’ படம் ரிலீசுக்குத் தயாராகி இருக்கிறது. சமீபத்தில் ரஷ்ய தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில், பனியில் ஜாலியாக விளையாடும் வீடியோ ஒன்றை தன்னுடைய இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார் ஸ்ரேயா.
அதில், மணிரத்னம் இயக்கிய ‘ரோஜா’ படத்தில் இடம்பெற்ற ‘புது வெள்ளை மழை’ பாடலை பாடுகிறார் ஸ்ரேயா. ‘புது வெள்ளை மழை’ பாடலில், பனிப் பிரதேசத்தில் அரவிந்த் சாமி மற்றும் மதுபாலா இருவரும் இருப்பது போல் படமாக்கப்பட்டிருக்கும். அந்தக் காட்சியை நினைவுபடுத்தி, தற்போது அதை பாடி உள்ளார் ஸ்ரேயா.

Related posts

மருத்துவமனையில் சிம்பு

பொன்னியின் செல்வன்: சுருக்கமான கதையாக..

நேர்கொண்ட பார்வை படக்குழு வெளியிட்ட அடுத்த அறிவிப்பு