சூடான செய்திகள் 1

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்க ஜனாதிபதியால் பரிந்துரைக்கப்பட்ட பெயர் நிராகரிப்பு

(UTV|COLOMBO)-ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக நியமிக்குமாறு, பரிந்துரைக்கப்பட்டவரின் பெயர், சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடிய அரசமைப்பு சபையினால் இரண்டாவது தடவையாகவும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

மேன்முறையீட்டு நீதிமன்றத் தலைவராக நியமிக்குமாறு, ஜனாதிபதியால் இதற்கு முன்னர் அனுப்பி வைக்கப்பட்ட பெயர், குறித்த சந்தர்ப்பத்திலேயே நிராகரிக்கப்பட்டது. எனினும். இரண்டு வாரங்களுக்குப் பின்னர், அதே பெயரை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அர​சமைப்பு ​சபைக்கு அனுப்பி வைத்துள்ளாரென அறிய முடிகின்றது.

மேன்முறையீட்டு நீதிமன்றத்துக்கான தலைவர் வெற்றிடம் தொடர்பில், அரசமைப்பு சபை நீண்ட நேரம் கலந்தாலோசித்தது. அதன் பின்னரே, ஜனாதிபதியினால் அனுப்பிவைக்கப்பட்ட பெயரை குறித்த சபை நிராகரித்ததாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

 

 

 

 

Related posts

லோட்டஸ் சுற்றுவட்டம் தற்காலிகமாக பூட்டு

ஜனாதிபதியின் 71 ஆவது பிறந்த நாள் இன்று

பொலிஸ் உயர் பத­விகள் பல­வற்றில் அதிரடி மாற்றம்!