சூடான செய்திகள் 1

கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த பல்கலை மாணவர்கள் விளக்கமறியலில்

(UTV|COLOMBO)-வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி புகைப்படம் எடுத்த தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் மாணவர்கள் எட்ட பேரும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

அவர்களை இன்றைய தினம் கெப்பத்திகொள்ளாவ நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போது அடுத்த மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

குறித்த பல்கலைக்கழக வளாகத்தில் வைத்து நேற்றைய தினம் ஏழு பேர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் மற்றைய நபர் காவல்துறையில் சரணடைந்திருந்தார்.

குறித்த தூபி மீது எடுத்துக்கொண்ட குறித்த புகைப்படம் கடந்த வருடம் ஜனவரி மாதம் 5 ஆம் திகதி எடுக்கப்பட்டது என விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.

வரலாற்று சிறப்புமிக்க கிரலாகல தூபி மீது ஏறி பிடிக்கப்பட்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் பரிமாறப்படுவதாக அந்த வலயத்திற்கு பொறுப்பான தொல்பொருள் அதிகாரி ஹொரவபொத்தான காவற்துறையில் நேற்று முன்தினம் முறைப்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

Related posts

கூட்டமைப்பினால் கொண்டுவரப்பட்ட பிரேரணை…

தேசிய பாடசாலைகளுக்கான ஆசிரியர் இடமாற்றம் தொடர்பிலான சுற்றுநிரூபம்…

பெலியத்த பகுதியில் இன்று(14) துப்பாக்கிச்சூடு