சூடான செய்திகள் 1

கைதிகள் தாக்கப்பட்டதை ஆராயும் குழுவின் அறிக்கை

(UTV|COLOMBO)-அங்குணகொலபெலஸ்ஸ சிறைச்சாலை கைதிகள் மீது சிறைச்சாலை அதிகாரிகள் தாக்குதல் மேற்கொண்டமை தொடர்பில் ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட சிறைச்சாலைகள் திணைக்களக் குழுவின் அறிக்கை, விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் 40க்கும் அதிகமான கைதிகளின் வாக்குமூலங்களும் குறித்த அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

தாக்குதல் தொடர்பான சீ.சீ.ரி.வி. காணொளிகளை ஊடகங்களுக்கு வழங்கியமை தொடர்பிலும் பொலிஸாரினால் விசேட விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் நிறுவன நடைமுறையின் கீழ் தண்டனை பெற்றுக்கொடுப்பதற்கு குறித்த அறிக்கையினூடாக பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

சிறைச்சாலைகள் ஆணையாளர் துஷார உபுல்தெனிய தலைமையில் நியமிக்கப்பட்ட குழுவில் மேலும் மூவர் அங்கம் வகிக்கின்றனர்.

இதேவேளை, நீதி மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சினால் குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பிலான விசாரணைகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள இரண்டாவது குழு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

குறித்த குழுவின் அறிக்கை அடுத்த வாரத்திற்குள் விடயத்துக்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த குழு, ஜனாதிபதி செயலகம், அரச நிர்வாக அமைச்சு மற்றும் சிறைச்சாலைகள் அமைச்சின் அதிகாரிகளை உள்ளடக்கியுள்ளது.​

 

 

 

 

Related posts

நாட்டின் 21 மாவட்டங்களில் இன்று ஊரடங்கு தளர்வு

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலைகள் குறைப்பு

editor

சிறைச்சாலை அதிகாரி கொலை தொடர்பில் மற்றுமொருவர் கைது