சூடான செய்திகள் 1

அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் அறுவர் கைது

(UTV|COLOMBO)-பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான அங்கொட லொக்காவின் உதவியாளர்கள் ஆறு பேர் பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

“சுரத்தல்” என அறியப்படும் சமீர பெரேரா ஒரு கிலோ கேரள கஞ்சாவுடன் நேற்று ஹிம்புட்டான பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர், பிணை அடிப்படையில் விடுவிக்கப்பட்டவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அங்கொட லொக்காவின் மற்றுமொரு உதவியாளரான வெலி ரொஹா உள்ளிட்ட ஐந்து பேர் வெல்லம்பிட்டிய பகுதியில் வைத்து நேற்று பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த கைது செய்யப்பட்டவர்கள் நவகம்புர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

 

 

Related posts

வானிலையில் சிறிது மாற்றம்

ஜனாதிபதி தேர்தல்; அடையாள அட்டைகள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவித்தல்

கடலில் நீராடச் சென்ற 4 பேர் நீரில் மூழ்கி பலி