சூடான செய்திகள் 1

இலங்கையில் இருந்து சவூதி அரேபியா சென்ற பணிப்பெண்கள் தொடர்பில் வௌியான காணொளி தொடர்பில் விளக்கம்

(UTV|COLOMBO)-பணிப்பெண் வேலை வாய்ப்பிற்காக சவூதி சென்ற இலங்கைப் பணிப்பெண்கள் பல வருடங்களாக அங்கிருக்கும் முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் சமூக வளைத்தலங்களில் காணொளிகள் வௌியாகியிருந்தன.

தமது பணிக்கான ஊதியம் வழங்கப்படாமல் தாங்கள் நீண்ட காலமாக முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக இலங்கைப் பணிப் பெண்கள் குறித்த காணொளியில் தெரிவிக்கின்றனர்.

இது சம்பந்தமாக தற்போது சவூதி அரேபியாவில் உள்ள இலங்கைத் தூதரம் ஊடக அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது. அந்த அறிக்கையை கீழே காணலாம்.

கடந்த மற்றும் தற்போது அச்சுப்பதிப்புகள், இலத்திரனியல் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்பு விடயங்களில் கனிசமான பங்களிப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற நடவடிக்கைளைப் பாராட்டும் அதேவேளை ஆக்கபூர்வமான செய்திகள் மற்றும் முன்மொழிவுகள், சம்மந்தப்பட்டவர்களுக்கு தேவையான சேவைகளை பல வழிகளில் வழங்குவது நன்மை பயக்கும்.

எப்படியாயினும், பகிரங்கப்படுத்தல் என்ற தோரணையில் அண்மைய காணொளிகள் மூலமாக வலைத்தளங்களில் வலம் வரும் செய்திகள் எங்களது கவனத்தை ஈர்த்தன.

இவ்வாறான காணொளிகள் ஊடான செய்திகளை மதிப்பீடு செய்ததன் பின்னர் இத்தூதரகம் அது சம்பந்தப்பட்ட அனைத்துத் தரப்பினருடைய கவனத்துக்கும் கொண்டு வருகின்ற செய்தியானது, நாங்கள் அனைவரும் மக்களுக்கு நற்சேவையை வழங்கவேண்டும் என்கின்ற நோக்குடன் செயற்படுகின்ற அதேவேளை எமது சேவையை நாடி வருபவர்களின் நலன்களையும், எமது உத்தியோகத்தர்களின் நலன்களையும், இவை அனைத்துக்கும் மேலாக எமது நாட்டினுடைய நலன்ளைப் பாதுகாத்துக் கொண்டு பயணிக்க வேண்டும் என்ற நோக்குடனேயே செயற்படுகின்றோம், என குறிப்பிட்டுள்ளது.

 

 

 

 

Related posts

50 மில்லியன் பெறுமதியான ஹெரோயினுடன் ஒருவர் கைது

அரசாங்க தகவல் திணைக்களத்தில் ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இன்று

வசீம் தாஜுதீன் கொலை – சட்ட வைத்திய அதிகாரிக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல்