சூடான செய்திகள் 1

ஸ்ரீ லங்கன் விமான சேவை தொடர்பிலான குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதிக்கு

(UTV|COLOMBO)-ஸ்ரீ லங்கன் விமான சேவையில் நிலவும் பிரச்சினைகளை சீர் செய்து அதனை மறுசீரமைப்பதற்கான கருத்துக்கள் மற்றும் முன்மொழிவுகளைப் பெற்று பரிந்துரைகளை முன்வைப்பதற்காக நியமிக்கப்பட்டிருந்த குழுவின் அறிக்கையானது இன்று(23) ஜனாதிபதியிடம் கையளிக்கவுள்ளதாக, குறித்த குழுவின் உறுப்பினரும் அமைச்சர் ஹர்ஷ டி சில்வா ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார்.

இராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன அவர்களின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள இந்த குழுவின் ஏனைய உறுப்பினர்களாக கலாநிதி ஹர்ஷ த டி சில்வா, கலாநிதி நந்தலால் வீரசிங்க, கலாநிதி தர்மரத்ன ஹேரத், பேராசிரியர் டி.பி.பீ.எச்.திசா பண்டார, வீ.கனகசபாபதி, எல்.எஸ்.ஐ.ஜயரத்ன, விராஜ் தயாரத்ன, மஹேன் கோபல்லவ, வசந்த குமாரசிறி, அஜித் அமரசேகர, திசுரி வன்னியாரச்சி ஆகியோர் அங்கத்துவம் வகிக்கின்றமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

 

Related posts

மட்டகளப்பு பல்கலைக்கழகம் பற்றிய பரிந்துரை அறிக்கை இன்று அமைச்சரவை குழுவுக்கு

விமானப் பயணிகளுக்கு மகிழ்ச்சியாக செய்தி! விஷேட கட்டண சலுகை

டுப்லிகேஷன் வீதியில் கடும் வாகன நெரிசல்