சூடான செய்திகள் 1

இன்று (23) முதல் மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்க திட்டம்

(UTV|COLOMBO)-பாடசாலை மாணவர்களை போதைப்பொருளிலிருந்து பாதுகாக்கும் அனைத்து பாடசாலைகளுக்குமான செயற்றிட்டம் இன்று (23) முதல் முன்னெடுக்கப்படுகின்றது.

போதைப்பொருள் ஒழிப்பு வாரத்தின் மூன்றாவது நாளில் குறித்த திட்டம் செயற்படுத்தப்படவுள்ளது.

இதன்போது போதைப்பொருள் பாவனையினால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் பாடசாலை மாணவர்களுக்கு பாதுகாப்பு அமைச்சினால் தௌிவுபடுத்தவுள்ளதாக, போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டொக்டர் சமந்த கிதலவஆராச்சி குறிப்பிட்டுள்ளார்.

எமது நாட்டிலுள்ள அனைத்துப் பாடசாலைகளுக்கும் பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளனர். மாணவர்கள் போதைப்பொருள் தொடர்பிலான சட்ட திட்டங்கள் தொடர்பில் விழிப்புணர்வு பெறுவதற்கும் அது தொடர்பிலான கலந்துரையாடல்களை மேற்கொள்வதற்கும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதேபோன்று இன்று முதல் விசேட திட்டம் ஒன்றும் முன்னெடுக்கப்படவுள்ளது. அனைத்து பாடசாலைகளிலும் பாடசாலை பாதுகாப்புக்குழு அமைக்கப்படவுள்ளது. சிற்றுண்டிச்சாலையில் போதைப்பொருள் விநியோகிக்க முடியும். சில சந்தர்ப்பங்களில் முச்சக்கரவண்டி சாரதிகள் மூலம் அல்லது பாடசாலை வேன்களில் வரும்போது இடம்பெற முடியும். பாடசாலைகளை அண்மித்துள்ள வர்த்தக நிலையங்களில் இருந்து போதைப்பொருள் விநியோகிக்க முடியும். இவ்வாறான விடயதானங்களில் இருந்து மாணவர்களை பாதுகாப்பதற்கான செயற்றிட்டமாக இந்த பாடசாலை பாதுகாப்புக்குழு அமைக்கப்படவுள்ளது

என போதைப்பொருள் ஒழிப்புத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான ஜனாதிபதி செயலணியின் பணிப்பாளர் டாக்டர் சமந்த கிதலவ ஆராச்சி தெரிவித்துள்ளார்.

Related posts

நாடாளுமன்ற வளாகப் பகுதி நீரில் மூழ்கும் நிலைமை?

சகல பாடசாலைகளும் எதிர்வரும் 6 ஆம் திகதி ஆரம்பிக்கப்படும்-கல்வி அமைச்சர்

ஜனாதிபதி வேட்பாளர்களுக்கு அதிகபட்ச பாதுகாப்பு